சென்னை, மே.12: மதர்ஹூட் மருத்துவமனை,  சென்னை, தாய்சேய் நலனுக்கான சிறப்பு தொடர் மருத்துவமனை, செவிலியர்களின் சேவைமனப் பான்மையை போற்றும் விதமாக உலக செவிலியர்தினத்தை உற்சா கத்துடன் கொண்டாடியது.

செவிலியர்களுக்கெல்லாம் அன்னையாக போற்றப்படும் ப்ளாரன்ஸ் நைடிங்கேள் அவர்களின் பிறந்த நாளை, உலக செவிலியர் தினமாக ஆண்டுதோறும்கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை போற்றும் விதமாக மருத்துவனமனையை  சேர்ந்த 40 முதுநிலை மற்றும் இளநிலை செவிலியர்களுக்கு, “மதர்ஹூட் தேவதைகள் எனும் பட்டத்துடன்முடிசூட்டப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசியவிஜய மீனாக்ஷி, மருத்துவமனை வசதி இயக்குனர்:உலக செவிலியர் தினத்தை எங்கள் மதர்ஹூட் மருத்துவமனை,  விலியர்களுடன்கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம்.  செவிலியர்களின் தன்னலமற்ற  சேவைகளை நினைவு கூறும் விதமாக இது அமைகிறது.

மேலும் மதர்ஹூட் மருத்துவ மனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களை பாராட்டு தெரிவிக்கும் வாய்ப்பாக இந்நிகழ்ச்சி திகழ்கிறது இச்சிறப்பு நிகழ்ச்சியில், ஒவ்வொரு செவிலியருக்கும், “மதர்ஹூட் தேவதைகள் எனும் பட்டமளித்து முடிசூட்டப்பட்டு அவர்கள் அனைவரையும் தனித்ததனியே புகைப்படமும் எடுக்கப்பட்டது.

இக்கொண்டாட்டங்களில், மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து செவிலியர்களும் நிர்வாக பணியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகள் மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில்பங்குபெற்று சிறப்பித்தனர்.