காஞ்சியில் பள்ளி பேருந்தில் வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு

தமிழ்நாடு

காஞ்சிபுரம், மே 12: காஞ்சிபுரத்தில் பள்ளி பேருந்து களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு செய்தனர். இதில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்த 15 பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் குழந்தை களை அழைத்து வர பயன்படுத்தும் பேருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட காஞ்சி புரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளில் செயல்படும் 43 தனியார் பள்ளிகளில் கல்வி கற்கும் குழந்தைகளை அழைத்து
செல்ல பயன்படுத்தும் 213 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

ஆய்வின்போது பேருந்துகளின் தரம், வேகக்கட்டுபாட்டு கருவி, அவசரகால வழி கதவுகள், முதலுதவி பெட்டி, மற்றும் பேருந்துகளின் ஆவணங் களை மாவட்ட கலெக்டரின் நேர் முக உதவியாளர் நாராயணன், டி.எஸ்.பி. பாலசுப்ரமணியன், முன்னி லையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.பி.
செந்தில்குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சிவகுமார், செங்கோட்டுவேல் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது 15 பேருந்துகளில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளை நிவர்த்தி செய்ய திருப்பி அனுப்பி வைத்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் குமார் நடவடிக்கை மேற் கொண்டார்.

வரும் மே 30-ம் தேதிக்குள் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்து சான்றி தழ் பெறாத பேருந்துகளை பள்ளி திறப்பின் போது குழந்தைகளை அழைத்து வர பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.