சென்னை, மே 13: திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில், மொத்தமுள்ள 297 வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்ரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு, சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயருடன் கூடிய பட்டியலை பொருத்தும் பணி நடைபெறவுள்ளது.