திருவள்ளூர், மே 13: பழவேற்காடு ஏரியில் படகுகள் மோதிக்கொண்டதில் காசிமேட்டை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பழவேற்காட்டில் இருந்து படகின் மூலம் முகத்துவாரம் பகுதிக்கு சென்னை காசிமேட்டை சேர்ந்த 16 பேர் சென்றதாக தெரிகிறது. முகத்துவாரத்தை பார்த்துவிட்டு திரும்பி வரும் போது எதிரே வந்த மற்றொரு படகின் மீது மோதியதில் படகில் இருந்த அனைவரும் நிலை தடுமாறி, தண்ணீருக்குள் மூழ்கினர்.

பின்னர் அருகில் இருந்த மீனவர்கள், அனைவரையும் தூக்கி கரை சேர்த்தனர். அத்துடன் அனைவரும் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மேரி ஜான் (50) என்பவர் உயிரழந்தார்.

உயிருடன் மீட்கப்பட்ட மற்ற 9 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார், மேரியின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இவர்கள் வந்திருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த படகு விபத்து குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு 2012 முதல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தடையை மீறி படகு சவாரி செய்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.