சென்னை, மே 13: திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று சந்திக்கிறார்.

மக்களவை தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.  இதையடுத்து, வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இன்று மாலை 4 மணிக்கு  சந்திரசேகர் ராவ் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

3வது அணி தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ், இன்று மாலை 4 மணியளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் அவரை சந்திக்கவுள்ளார். அதை தொடர்ந்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, மம்தா, மயாவதி, நவீன் பட்நாயக், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரையும் சந்தித்து ஆதரவு கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.