ஜி.கே.வாசன், த.மா.கா. தலைவர்

தமிழகத்தில் மாலை பத்திரிகைகளில் மிக சிறப்பாக செய்திகளை அளித்து முன்னணியில் உள்ள பத்திரிகையின் வரிசையில் இருக்கும் மாலைச்சுடர் பத்திரிக்கை வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிக்குரியது.

தமிழகத்தில் பல்வேறு மாலை பத்திரிகைகளில் மாலைச்சுடர் மக்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.

பத்திரிகை உலகில் பல போட்டிகள் இருந்த போதிலும் அவற்றிற்கு இணையாக, மாலைச்சுடர் அரசு திட்டங்கள், விவசாயிகளின் நலன், தொழில் நலன், வேலையில்லா பட்டதாரிகளுக்கு நலன் சார்ந்த செய்திகள், தொழில், விளையாட்டு, அரசியல் என்று பல்வேறு செய்திகளை அளித்து சிறந்து விளங்குகிறது.

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்று மக்கள் நலன் சார்ந்த பத்திரிக்கையாக விளங்கும் மாலைச்சுடர் மென் மேலும் வளர்ந்து நூற்றாண்டை காண என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்.