ஏவிஎம் சரவணன் (தயாரிப்பாளர்):-
அமரர் டி.ஆர்.ஆர். லட்சியத்தில் உருவான ‘நியூஸ்டுடே’ நாளிதழின் சகோதர ஏடான‘ ம வலைச்சுடர் ‘2 4 – ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தையை போலவே பத்திரிகைகளை சிறப்பாக நடத்தி வரும் டி.ஆர்.ஜவகர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

எஸ்.பி.முத்துராமன் (இயக்குனர்):-
வெள்ளி விழா கொண்டாடும் மாலைச் சுடருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சுடரின் பிரகாசம் இன்னும் பல ஆண்டுகள் ஒளிவீசும் என்பதில் ஐயமில்லை.

விக்ரமன் (தமிழ்நாடு
இயக்குனர்கள் சங்க தலைவர்):-
பல்வேறு போராட்டங்களை கடந்து 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ‘மாலைச்சுடர்’ பத்திரிகை இன்னும் நூறு ஆண்டுகள் பிரகாசிக்க மனதார வாழ்த்துகிறேன்.

விஷால் (தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கதலைவர்):-
சமூக வலை தளங்களின் ஆதிக்கத்தால் இன்றைய சூழ்நிலையில் பத்திரிகைகள் நடத்துவது மிகவும் சிரமமான ஒன்று. 24 ஆண்டுகளை கடந்து 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள ‘மாலைச்சுடர்’ நாளிதழுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.அரசியல் மட்டுமின்றி சினிமா துறைக்கும் சிறப்பான சேவை ஆற்றி வரும் ‘மாலைச்சுடர்’ இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

நாசர் (தென்னிந்திய
நடிகர் சங்க தலைவர்):-
ம வ ற ல பத்திரிகைகளில் தனக்கான தனித்துவத்துடன் வெளிவரும் ‘மாலைச்சுடர்’ இன்று 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த வேளையில் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு நடிகர்சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

பிரபு (நடிகர்):-
‘நியூஸ்டுடே’, ‘மாலைச்சுடர்’ குழுமத்துடன் எனது தந்தை காலத்தில் இருந்தே நல்ல உறவு உண்டு. இன்றைய தினம் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்து வெள்ளி விழா கொண்டாடும் மாலைச்சுடருக்கு வாழ்த்துக்கள்.

கலைப்புலி எஸ்.தாணு (தயாரிப்பாளர்):-
‘இந்த நாள் இது. இனிய நாள் இது. இன்றைய தினம் சுடர் வீசி வெள்ளி விழா கொண்டாடும் மாலைச்சுடருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் கலைசேவை ஆற்றிட வாழ்த்துகிறேன்.

சூர்யா (நடிகர்):-
இன்று 25-வது பிறந்தநாள் காணும்‘ மாலைச்சுடர் ‘இதழு க்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் வாழ்த்துக்கள். பல்வேறு சுவையான செய்திகளை சுடச்சுட வழங்கி வரும் மாலைச்சுடர் இன்னும் பல ஆண்டுகள் ஒளி வீச வாழ்த்துக்கள்.

விஜய் சேதுபதி (நடிகர்):-
மாலை பத்திரிகைகளில் சிறந்து விளங்கும்‘ மாலைச்சுடர் ‘25-ம் ஆண்டில் அ டியெடுத்து வைப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. சினிமாகலை ஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது.

ராகவா லாரன்ஸ்
(இயக்குனர், நடிகர்):-
பத்திரிக்கை தர்மத்தை கடைபிடித்து பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே தொய்வின்றி சேவையாற்றி வரும் மாலைச்சுடர் பத்திரிக்கை பொன்விழா, பவளவிழா கொண்டாட வாழ்த்துகிறேன்.

அம்ரீஷ் (இசையமைப்பாளர்):-
25-வருடம் என்பது ஒரு சாதனை. அதைநோக்கி பயணிக்கும் ‘மாலைச்சுடர்’ மென்மேலும் வளர என் சார்பிலும், என் தாயார் (ஜெய்சித்ரா) சார்பிலும் மனமார்ந்தவாழ்த்துக்கள்.

ஆர்.பி.சௌத்ரி (தயாரிப்பாளர்):-
சினிமா துறையில் எங்கள் நிறுவனத்திற்கு வயது 29 ஆண்டுகள். அதே போல் எங்களோடுப யணிக்கும் மாலைச்சுடருக்கு வயது 25. இன்னும் பல ஆண்டுகள் வளர வாழ்த்துக்கள்.

ஸ்ரீகாந்த் (நடிகர்):-
செய்திகளை முந்தித்தரும் மாலைச்சுடருக்கு வாழ்த்துக்கள். மாலை பத்திரிகைகளில் தனக்கென தனி இடத்தை பெற்றுக்கொண்டு மக்கள் சேவையாற்றி வரும் இந்நிறுவனம் இன்னும் பல ஆண்டுகள் வெற்றி நடைபோட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நமிதா (நடிகை):-
தினமும் சுடச்சுட சினிமா செய்திகளை வழங்கி வரும் மாலைச்சுடருக்கு ஹாப்பி பர்த் டே. சில்வர் ஜூப்ளி கொண்டாடும் மாலைச்சுடருக்கு வாழ்த்துக்கள்.

ஸ்நேகா (நடிகை):-
மாலை நேரத்தில் அரசியல், சினிமா என சுவாரஸ்யமான செய்திகளுடன் வெளிவரும் ‘மாலைச்சுடர்’ 25-வது ஆண்டில் நுழைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஷாம் (நடிகர்):-
25 ஆண்டுகள் என்பது சாதாரன விசயமில்லை. அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி நடைபோடும் மாலைச்சுடருக்கு வாழ்த்துக்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் (நடிகை):-
சமூக வலைதளங்களின் ஆதிக்கம், டிஜிட்டல் மீடியாவின் வளர்ச்சி ஆகியவைகளுக்கு இடையே சிறப்பான சேவை செய்து 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மாலைச்சுடருக்கு வாழ்த்துக்கள்.

சிவகார்த்திகேயன் (நடிகர்):-
சின்னத்திரை, பெரியத்திரை என கஷ்டப்பட்டு நான் முன்னேறியது போல் மாலை பத்திரிகைகளில் பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே இன்று தனக்கென தனி இடத்தைப்பிடித்து வெள்ளி விழா கொண்டாடும் மாலைச்சுடருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜெயம்ரவி (நடிகர்):-
எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் வகையில் செய்திகளை வெளியிட்டு கடந்த 24 ஆண்டுகளாக கலைசேவை செய்து வரும் மாலைச்சுடர் நிறுவனம் இன்று 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

அதர்வா (நடிகர்):-
இன்றைய காலக்கட்டத்தில் பத்திரிகை நடத்துவதே சிரமமான ஒன்று. அந்த சிரமங்களை யெல்லாம் தாண்டி 25-வது ஆண்டில் கால்பதித்துள்ள மாலைச்சுடருக்கு வாழ்த்துக்கள்.