சென்னை, மே 14:  வளர்ந்து வரும் விஞ்ஞான மாற்றத்தில் அச்சு ஊடகங்கள் வெற்றி பெறுவது என்பது இன்றைக்கு மிகப்பெரிய சவால். இத்தகைய சூழ்நிலையில், மாலைச்சுடர் நாளிதழ் வெற்றிகரமாக வெளி விழாவை கொண்டாடுவது அரிய சாதனை.

மக்களுக்கு தரமான செய்திகளை தருதல், மக்களை நல்வழிப்படுத்துதல், மக்களை மகிழ்வித்தல், நடுநிலை தவறாமல் கருத்துக்களை பகிர்தல், பண்பாட்டை பேணிக் காத்தல், அரசியல் வளர்த்தல் அனைத்தையும் ஒருங்கிணைத்து வெளிப்படுத்துவதில் மாலைச்சுடர் நாளிதழ் செயல்பாடு என்றைக்கும் தனித்துவமானது.

பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் தொடர்ந்து மாலை தோறும் நாளிதழை வெளிக் கொண்டு வந்து அச்சு ஊடகத்தினை காப்பாற்றும் துணிச்சல் மாலைச்சுடர் நிர்வாகத்திற்கு உண்டு. எத்தகைய இடர்வரினும் அத்தனையும் நான் தவிடு பொடியாக்குவேன் என்கிற நிர்வாகத்தின் மன உறுதி தான் மாலைச்சுடர் மகத்தான வெற்றி.

வெள்ளி விழா காண்பது போல அடுத்து பொன்விழா, வைரவிழா என சாதனைகள் படைக்க மாலைச்சுடரை அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் வாழ்த்துகிறேன்.