டெல்லி, மே 15: ஐபிஎல் கோப்பையை வேண்டுமானாலும் மும்பை அணி வென்றிருக்கலாம், ஆனால், ரசிகர்களின் மனதை வென்ற சென்னை அணி தான், தற்போது டிவிட்டரில் ஆதிக்கம் செலுத்தி ட்ரெண்டிங்கில் உள்ளது.  இந்தாண்டு ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து சமூக வ¬லைதளமான டிவிட்டரில் பகிரப்பட்டுள்ள விவரங்களின் தொகுப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே சென்னை அணி குறித்துதான் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

வீரர்களைப் பொருத்தவரையில், அதிகம் டிவிட் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் சென்னை கேப்டன் தோனி முதலிடம் பிடித்துள்ளார். கோலி, ரோஹித் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.ஐ.பி.எல். தொடர் குறித்து 2.70 கோடி டிவிட்டுகள் (மார்ச் முதல் மே 13-ம் தேதிவரை) பதிவிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 44% அதிகமாகும்.
தோனி குறித்த ஹர்திக் பாண்டியாவின் டிவிட்டை, 16,000 பேர் ரீ-டிவிட் செய்துள்ளனர். இதன்மூலம், இது தொடரின் சிறந்த டிவிட்டாகி உள்ளது. ரசிகர்களிடையே அதிகம் விவாதிக்கப்பட்ட டிவிட்டாக சென்னை-மும்பை இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்த பதிவுகள் முதலிடம் பெற்றுள்ளன.

இறுதிப்போட்டியில், மும்பை அணி கோப்பையை வென்றாலும், ஐபிஎல் கோப்பையை வேண்டுமானாலும் மும்பை அணி வென்றிருக்கலாம். ஆனால், ரசிகர்களின் உள்ளங்களை வென்று டிவிட்டரில் முதலிடம் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்தான், அடுத்த இரு இடங்களை மும்பை, கொல்கத்தா அணிகள் பெற்றுள்ளன. இதேபோல், விறுவிறுப்பான ஐபிஎல் இறுதிப்போட்டியை 16.9 மில்லியன் பேர் ஹாட் ஸ்டாரில் பார்த்துள்ளனர் என்பது, கூடுதல் தகவல்.