மலையாளத்தில் கலக்கும் ஆர்கே சுரேஷ்

சினிமா

வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக வளர்ந்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் தற்போது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் படம் கொச்சின் ஷாதி அட் சென்னை 03. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.
படத்துக்கு ஐயப்பன் ஒளிப்பதிவு செய்ய சன்னி விஸ்வநாத் இசையமைக்கிறார். ரிஜேஷ் பாஸ்கர் கதை எழுத, ஆர்யா ஆதி இண்டர்நேஷ்னல் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்தயாரித்துள்ளார்.
படப் பிடிபபு கேரளாவின் பாலக்காடு, கொச்சின், குருவாயூர், நாகர்கோயில் , மார்த்தாண்டம், கோவை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.