‘கடல போட பொண்ணு வேணும்‘ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மனிஷாஜித்

சினிமா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 40 படங்களுக்கு மேல் நடித்து தற்போது கதாநாயகியாக நடித்து வரும் நடிகை மனிஷாஜித் தற்போது ‘கடல போட பொண்ணு வேணும்’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து அவர் ஆர்வமாக காத்திருக்கிறார்.

தனது திரை வாழ்க்கை குறித்து நடிகை மனிஷாஜித் கூறும்போது, எனது முதல் படம் கம்பீரம். அதில் சரத்குமாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 40 படங்களில் நான் நடித்திருக்கிறேன்.

சஞ்சீவ் நாயகனாக நடித்த நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் முதன் முறையாக நாயகியாக நடித்தேன், அதனை தொடர்ந்து கமர்கட் படத்தில் நடித்தேன், அடுத்த படம் ஆண்டாள் விரைவில் வெளியாக இருக்கிறது. எனது தற்போதைய படமான ‘கடல போட பொண்ணு வேணும்’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.