சென்னை, மே 15: திருமங்கலம் அருகே காவலாளியிடம் செல்போனை திருடிக்கொண்டு தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடிவருகின்றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அலிக் கச்சுவா (வயது 22). இவர், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக கட்டிடத்தின் ( மாலில்) காவலாளியாக பணியில் உள்ளார்.

கடந்த 13-ம் தேதி இரவு இங்கு வந்த மர்மநபர்கள், அலிக்கை தாக்கிவிட்டு அவரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இது குறித்து,திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, பாடி குப்பத்தை சேர்ந்த நந்தக்குமார் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும், சூர்யா என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.