சென்னை, மே 15: மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில்,அரசு தொடர்ந்து வெற்றி நடை போடவும், அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும், 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென வாக்காளர்களை முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து, மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பெற்றுள்ள ஜெயலலிதா வழியில், நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த நல்லாட்சியில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிட குடிமராமத்து திட்டம், பணிக்குச் செல்லும் மகளிர்க்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், அனைத்துத் தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி ரூ. 2,000 ஆகிய திட்டங்கள் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது.

மேலும், சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்ததற்கான முதன்மை விருது, உணவு தானிய உற்பத்தியில் சாதனை புரிந்தமைக்கான மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதுகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் முதன்மை மாநிலத்திற்கான மத்திய அரசின் விருது, சமூகப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தமிழ் நாட்டிற்கு நல் ஆளுமைக்கான விருது, பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினி மயமாக்கியதற்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது அரசு.

மேலும், அனைத்துத் துறைகளின் மூலம் மக்கள் நலத் திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறது. காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டும் வகையில் இவ்வரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளினால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் 3,024 ஏரிகள் மற்றும் குளங்கள் ரூ. 429 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்குப் பின்பு தூர்வாரப்பட்டுள்ளது. கொங்கு மண்டல விவசாயிகளின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டம் ரூ. 1,652 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் கழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் உயர்வு பெற்றுள்ளது.

70.59 லட்சம் ஏழை எளிய பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ. 1,223.35 கோடி செலவில் விலையில்லா நான்கு இணை சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு 250 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 202 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளதோடு, 20 புதிய தொடக்கப் பள்ளிகளும் துவக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் சந்தேகங்கள் மற்றும் விரைவான குறை தீர்வுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 2,437 ஆசிரியர்கள் மற்றும் 793 ஆசிரியரல்லாதோர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  ஏழை, எளிய மக்களுக்கும் தரமான உயர்தர சிகிச்சை கிடைத்திட வேண்டும் என்பதற்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ உதவித் தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், இதுவரை, ரூ. 2,127.17 கோடி செலவில் 13.90 லட்சம் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. அரசு நடுநிலைப் பள்ளிகளில்
(3-ம் பக்கம் பார்க்க)