இரு விமானங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

உலகம்

நியூயார்க், மே 15: அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவர் நகரில் இருந்து, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை ‘ராயல் பிரின்சஸ்’ கப்பல் சுற்றுலா பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கப்பலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, கடந்த சனிக்கிழமை வான்கூவரில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த கப்பல் நேற்று முன்தினம் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள சுற்றுலா தலமான கெட்சிகன் நகரை வந்தடைந்தது.

அப்போது ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் 2 கடல் விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர். இதில் ஒரு விமானத்தில் 11 சுற்றுலா பயணிகளும், மற்றொரு விமானத்தில் 5 சுற்றுலா பயணிகளும் இருந்தனர்.

இந்த இரு விமானங்களும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, கெட்சிகன் நகருக்கு திரும்பி கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் நடுவானில் இருவிமானங்களும் மோதின. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.