புதுடெல்லி, மே 15: புதுடெல்லியில் திடீர் மழை: வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்.சி.ஆர் பகுதிகளில் காலை முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

டெல்லியில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய பலத்த மழை வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்துள்ளது. சாலை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல பகுதிகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கியதால் மக்கள் இயல்வு வாழ்க்கை பாதிப்படைந்தது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. வேலைக்கு செல்பவர்களுக்கும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பெரும் சிரமம் ஏற்ப்பட்டது.