சென்னை, மே 15: சென்னை, அண்ணாநகரில் கடைகளை உடைத்து அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்தேறுவதாக அண்ணாநகர் போலீசுக்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து, துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் மேற்பார்வையில் தனிப்படை அமத்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில், சி.எம்.பி.டி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்து கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய நபரை பிடித்து விசாரித்ததில், அரியலூரை சேர்ந்த சிவா (வயது 28) என்பதும், இவருக்கும், தொடர் கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்புள்ளது கண்டறியப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.