விழுப்புரம், மே 15: திண்டிவனம் அடுத்த காவேரிபாக்கம் சுப்பராயன் தெரு பகுதியில் வசித்து வரும் வெல்டிங் ஒர்க் ஷாப் கடை நடத்தி வருபவர்ராஜி (60) இவர் வழக்கம் போல் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டின் அறையில் இருந்த குளிர்சாதனபெட்டியில் ஏற்பட்டர மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ராஜீ அவரது மனைவி கலா (52) மற்றும் அவரது மகன் கௌதம் (27) ஆகிய மூவர் உடல்கருகி சம்பவ இடத்தில யே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்புதுறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் வீட்டிலிருந்தஉடல்களை மீட்டனர்.