அதர்வாவின் ‘100’ பட காட்சிகள் அதிகரிப்பு

சினிமா

அதர்வா முரளி – ஹன்சிகா மோத்வானி நடித்த “100” பாக்ஸ் ஆபிஸில் நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன.

சாம் ஆண்டன் இயக்கிய ‘100’ திரைப்படத்தை ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரித்திருந்தார்.

ஜிகுரு ஸ்ரீ மிஸ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் சிஎஸ் பதம்சந்த் ஜெயின், தமிழ்நாடு முழுக்க இந்த திரைப்படத்தை வெளியிட்டார். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் 50 காட்சிகள் மற்றும் 25 திரையரங்குகள் அதிகரித்துள்ளன.