காஞ்சிபுரம், மே 16: காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உலக திறனாய்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில் காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 6,7,8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உலக திறனாய்வு திட்ட தங்குமிடம் பயிற்சி முகாம் கடந்த 01,05,2019 அன்று தொடங்கி 15,05,2019 நேற்று நிறைவடைந்தது.

இதில் 150 மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இதில் சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். நீச்சல் பயிற்சியாளர் ஆனந்தன் வரவேற்புரை வழங்கினார்.

பேட்மிட்டன் பயிற்சியாளர் வினோத், உடற்கல்வி பயிற்சியாளர் கார்த்திக், முரளி, ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சியளித்தனர்.

சிறப்பு விருந்தினராக முன்னால் இந்திய மருத்துவ சங்க தலைவர் பி.டி.சரவணன், சுறா நீச்சல் மன்ற தலைவர், சாந்தாராம், ரோட்டரி லயன்ஸ் கிளப் முன்னால் தலைவர் தரணிதரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.