வேளாண் படிப்பிற்கு விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்

தமிழ்நாடு

திருச்சி, மே 16 தொலைதூர கல்வி இயக்கத்தின் வழியாக திருச்சியில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை (17-ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக இடுபொருள் விற்பனையாளர் சான்றிதழுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு 2019-20 கல்வியாண்டின் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த படிப்பில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், வேளாண் சார்ந்த தொழில் புரிவோர் மற்றும் சுய தொழில் புரிவோர் சேர்ந்து பயன்பெறலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் இந்த படிப்பில் சேரலாம்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tnau.ac.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.