கமல் மீது இந்து முன்னணியினர் புகார்

சென்னை

சென்னை, மே 16: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து முன்னணி கட்சி வில்லிவாக்கம் தொகுதி தலைவர் வெங்கடேசன், வில்லிவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.நீ.ம கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மதகலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது.