மாடியிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

சென்னை

சென்னை, மே 16: வண்ணாரப்பேட்டையில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலியாகியுள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னை, வண்ணாரப்பேட்டை டி.எச்.ரோடு பகுதியை சேர்ந்தவர் மீனா (வயது 42). அதே பகுதியை சேர்ந்தவர் முகமது கவுஸ் (வயது 50). தச்சராக வேலை பார்த்துவந்த இவருடன், மீனாவும் கடந்த சில வாரங்களாக வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மீனாவின் வீட்டிற்கு முகமது வந்துள்ளார். இருவரும் வீட்டின் 2-வது மாடியில் நின்றபடி, பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, மாடியில் இருந்து கீழே தவறிவிழுந்து மீனா உயிரிழந்துள்ளார்.

இது குறித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து முகமதுவிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். மீனா மதுபோதையில் இருந்ததாக தவறி விழுந்ததாக முகமது போலீசில் தெரிவித்துள்ளார்.