புதுவை, மே 17: புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் மகா உற்சவத்தையொட்டி, முதலமைச்சர் நாராயணசாமி தேர் இழுத்து தொடங்கிவைத்தார்.
புதுவை காந்தி வீதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோயில். இக்கோயிலில் நடைபெறும் மகா உற்சவத்தையொட்டி, இன்று காலை தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புதுவை முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற செயலாளருமான லட்சுமி நாராயணன், ராஜ்பவன் வட்டாரத் தலைவர் வேல்முருகன் ஆகியோரும் உடன் கலந்துகொண்டு தேர் இழுத்து வழிபட்டனர். மேலும், திரளான பக்தர்களும், ஆலய நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.