வெளிநாட்டு லீக்கில் விளையாடும் முதல் இந்தியர் இர்பான்

விளையாட்டு

ஆண்டிகுவா, மே 17:  இந்தியாவின் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை போன்றே, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளும் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் இடம்பிடித்துள்ளார். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவரின் பெயர், கரீபியன் பிரிமீயர் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இருபது நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்களின் வரைவுப்பட்டியலில் பதானும் இடம்பெற்றுள்ளார். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி யில், ஏதாவது ஒரு அணி பதானை ஏலத்தில் எடுத்தால், கரீபியன் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இந்த தொடர் வரும் செப்டம்பரில் தொடங்கவுள்ளது, குறிப்பிடத்தக்கது.