சென்னை, மே 17: சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்து வரும் 10-ம் வகுப்பு மாணவர் வி.தருண் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் கராத்தே போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார்.

சென்னை ஆல்பா பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் வி.தருண், கராத்தே போட்டிகளில் சாதித்து வருகிறார். அவரது பெற்றோர் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலை நடத்தி வருகின்றனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் கராத்தேயில் மிகவும் அக்கறையுடன் பயிற்சி எடுத்து பதக்கங்களை குவித்து வருகிறார்.

கராத்தே மாஸ்டரான கியோஷி ராஜ்குமார் இவருக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார். பல்வேறு கராத்தே போட்டிகளில் தங்க பதக்கங்களை குவித்த தருணுக்கு இந்திய ராணுவத்தில் மேஜராக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இவரது திறமையில் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெறும்.சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார்.