சென்னை, மே 17: வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

ஒரு முனை மின் இணைப்பை மும்முனை மின் இணைப்பாக மாற்ற ரூ.2.350 லஞ்சம் வாங்கியதாக இவர்மீது புகார் கூறப்பட்டது. இதனையடுத்து, சம்பவயிடத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அரசு கட்டணத்தை விட கூடுதலாக பணம் வாங்கிய சரவணனை கையும் களவுமாக கைது செய்தனர்.