டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

சென்னை

சென்னை, மே 17:சென்னை மற்றும் மாம்பலத்தில் பெருநகர மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறையினர் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னைபெருநகர மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறையினர் வீடுகள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தளங்களில் இருந்து டெங்கு காய்ச்சல் மற்றும் டைபாய்டு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியும் தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநகராட்சி வண்டிகளில் பிளாஸ்டிக், டயர் மற்றும் தண்ணீர் தேங்கும் பொருட்களை வீடு வீடாக சென்றும், கண்ணால் பார்த்தால் அதைப் பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்தி பணியாளர்கள் அதை அகற்றி வருகின்றனர். இது மக்களுக்கான நலத்திட்டம் என்பதால் மக்களும் தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றியும், தேவையற்ற பொருட்களை மாநகராட்சி வண்டிகளில் கொட்டியும் உதவி புரியுமாறு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-எஸ்.விக்னேஷ்