வி.ஐ.டி.க்கு சிறந்த பல்கலைக்கழக விருது

இந்தியா

புதுடெல்லி, மே 17: வி ஐ டிக்கு இந்தியாவில் சிறந்த பல்கலைக்கழக விருது வழங்கப்பட்டது. ஐரோப்பா பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பான யுனிகா சார்பில் இந்தியாவிற்கான செக் குடியரசின் தூதரக அதிகாரி டெல்லியில் வழங்கினார்.

ஐரோப்பாவின் 37 தலைநகரங்களில் உள்ள பல்கலைக்கழகளின் கூட்டமைப்பின் சார்பில் யுனிகா என்ற அமைப்பு பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்சில் இயங்கி வருகிறது. யுனிகா அமைப்பு உலகளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்விக்கான தலைமைப் பண்பை உருவாக்கிடவும் சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்கள் இணைந்து உலகளாவிய உயர்கல்வி வழங்க ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

யுனிகா அமைப்பு ஆண்டு தோறும் உலகளவில் உயர்கல்வியை சிறப்பாக வழங்கி வரும் பல்கலைக்கழகங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. யுனிகா அமைப்பின் வருடாந்திர கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் உயர் கல்வியை உலகளவில் சிறப்பாக வழங்கி வருவதை யுனிகா அமைப்பு தேர்வு செய்து விஐடிக்கு விருது வழங்கியது.

யுனிகா அமைப்பின் சார்பில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக விஐடியை தேர்வு செய்து அதற்கான விருதை இந்தியாவிற்கான செக் குடியரசின் தூதரக அதிகாரி எவா செம்லிகோவா வழங்க வி ஐ டி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பெற்றுக் கொண்டார்.

உடன் வி ஐ டி சர்வதேச உறவுகள் இயக்குநர் முனைவர் விஜயகுமார், உதவி இயக்குனர் முனைவர் முகம்மது ருக்னுதின் காலிப்.