சென்னை, மே 17: ஓட்டேரியில் உள்ள மருந்தகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட போதை சிரப்பு பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை ஓட்டேரியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் (மருந்தகம்) எந்நேரமும் அளவுக்கு அதிகமாக கூட்டம் அலைமோதியது. இது குறித்த தகவலறிந்து சந்தேகத்தின்பேரில், இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், போதை தரும் சிரப்பு விற்பனை செய்துவந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிரப்பு பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கடை உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.