மடிப்பாக்கம் பஜனை கோயில் தெருவில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி பக்த பஜனை கோயிலில் மூலவர், உற்சவர் உள்ளிட்ட விக்ரகங்களை நிறுவும் பணி நடந்துவருகிறது.

இக்கோயிலில் 150 வருடங்களாக வாரந்தோறும் பஜனை, வருடந்தோறும் உற்சவம், உறியடி விழா, மற்ற விசேஷ நாட்களில் ஹரி பந்த சேவை ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோயில் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் அவற்றை புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

மேலும், நூதன வேணுகோபால சுவாமி மூலவர், உற்சவர், ஸ்ரீவேங்கடேச பெருமாள் மூலவர், உற்சவர் ஆகிய விக்ரகங்களும், நூதன விமானம், நூதன ராஜகோபுரம் ஆகியவை நிறுவுவதற்கும் வேண்டிய கட்டிட திருப்பணிகள் நடைபெற்றுவருகிறது. ஆலய திருப்பணிகளில் பங்குகொள்ள விரும்புவோர்

தொடர்புக்கு: 99529 58065/ 94444 08225.