காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளின் 126-வது ஜெயந்தி மஹாத்ஸவத்தையொட்டி, உலக நன்மை வேண்டியும், மழைவேண்டியும் சிறப்பு வழிபாடு மடிப்பாக்கம் ஸ்ரீஸத் சங்கத்தில் உள்ள சங்கர ஹாலில் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது.

இதனையொட்டி, அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீ கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மாலை 3 மணிக்கு உபநிஷத் பாராயணம், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ மஹாபெரியவர் பட ஊர்வலம் பாராயணத்துடன் நடைபெற உள்ளது. தொடர்புக்கு: 2258 3330.