திரிசூலம், முத்துமாரியம்மன் நகரில் உள்ள திரிசூலம்ஸ்ரீ காளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் சித்திரை பெருந்திருவிழா மே 5-ம் தேதி நடைபெற்றது. இதனையொட்டி, மே 3-ம் தேதி தாய்வீட்டு சீர் பெறுதல், பூங்கரகம் ஜோடிப்பு மற்றும் அன்னதானம், 4-ம் தேதி காலையில் பூங்கரக ஊர்வலம், மாலை 5 மணிக்கு பால்குட ஊர்வலம், அபிஷேகம் மற்றும் அன்னதானம், இரவு 7 மணிக்கு அம்பாள் புஷ்ப பல்லக்கில் வீதி உலா, 5-ம் தேதி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், பகல் 11 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை 6 மணிக்கு தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், வேப்பஞ்சேலை உடுத்துதல், இரவு 7 மணிக்கு தீமிதி திருவிழா, மாபெரும் அன்னதானம் மற்றும் மஹா ஆரத்தி நடைபெற்றது.