சைதாப்பேட்டையில் உள்ள காரணீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகம் 18-ம் தேதி அன்று நடைபெற்றது. அன்று காலை சண்முகர் மற்றும் பஞ்சமூர்த்திக்கு அபிஷேகம், திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.

21-ம் தேதி திருஞானசம்பந்தர் திருநட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், 22-ம் தேதி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை, 24-ம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இரவு 7 மணி அளவில் அருள்மிகு சொர்ணாம்பிகை உள்புறப்பாடு, 29-ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிவை முன்னிட்டு சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறுகிறது. மேலும் இந்த ஆலயத்தில் 16-ம் தேதி மாலையில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

மேலும் 31-ம் தேதி அன்று பிரதோஷ பூஜை நடைபெறுவதுடன் ஜூன் 1-ம் தேதி அன்று பரணியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற உள்ளது.