எம்.ஜி.ஆர் நகர் காமராஜர் தெருவில் உள்ள அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 8-ம் முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் வைகாசி விசாக வசந்த உற்சவத்தில், காலை மற்றும் மாலையில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. மேலும் இந்த ஆலயத்தில் புதிதாக கொடிமரம் திருப்பணி நடைபெறுகிறது. பக்தர்கள் இந்த திருப்பணியில் பங்கேற்குமாறு நிர்வாகத்தின் கேட்டுக்கொள்கின்றனர்.

மல்லீகேஸ்வரர்
அசோக்நகர் போலீஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள மல்லீகேஸ்வரர் ஆலயத்தில் வரும் 18-ம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது. மாலையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன.

சொர்ணபுரீஸ்வரர்
அசோக்நகர் 9-வது அவென்யூவில் உள்ள சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 18-ம் தேதி முருகனுக்கு சந்தன காப்பு நடைபெறுகிறது. 8-ம் ஆண்டு மஹோத்ஸவம்