ஸ்ரீநகர், மே 18: ஜம்மு காஷ்மீரில் அவந்திபோராவில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவந்திபோராவில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். பாதுகாப்புப்படையினர் திருப்பித் தாக்கியதில் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதி ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.