மும்பை, மே 18: காயம் குணமாகிவிட்டதால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ், ஐபிஎல் தொடரில் விளையாடிய போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். இதனால், அவர் பாதியிலேயே தொடரை விட்டு விலகினார்.

உலகக்கோப்பை தொடங்குவதற்குமுன் இவர் குணமாகிவிடுவாரா? என்ற சந்தேகம் நிலவிவந்தது.
இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் பர்ஹர்ட் அளித்த மருத்துவ சிகிச்சைகளுக்குபின்னர், வியாழக்கிழமை கேதருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்பட்டது.

அதில் அவர் காயம் குணமாகி விட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கேதர் உலகக்கோப்பையில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. எனினும் இது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் வெளியிடவில்லை.