விழுப்புரம், மே. 18: விழுப்புரம் வட்டம், சிறுவந்தாடு அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று நரசிம்மர் ஜெயந்தி விழா நடைபெற்றது, விழாவையொட்டி நேற்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. காலை 7.30 மணிக்கு மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து மகா தீபாராதனையும் காலை 8.30 மணிக்கு நரசிம்மா சுதர்சன ஹோமம் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு வசூத்தரா ஹோமமும், மஹா பூர்ணாஹுதி, மற்றும் யாகசாலையிலிருந்து கலசம் புறப்பாடாகி மூலவர் மற்றும் உற்சவர் கலச தீர்த்தம் சேர்க்கப்பட்டது. இதையடுத்து மகா தீபாராதனை மற்றும் மாலை 3 மணிக்கு பெருமாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெயக்குமார், கோயில் முதன்மை அர்ச்சகர் பார்த்தசாரதி கிராம மக்கள் செய்திருந்தனர்.