சூலுர், மே 19: சூலூர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், 103 வயது மூதாட்டி ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்.

2016ம் ஆண்டு அதிமுக சார்பில் சூலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தை தொடர்ந்து, இந்த தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் சூலூரில் வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூலூர் தொகுதிகுட்பட்ட பாப்பம்பட்டி வாக்குசாவடி மையத்தில் 103 வயது மூதாட்டி முனியாம்மாள் தனது வாக்கை பதிவு செய்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.