கரூர், மே 19: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரவக்குறிச்சி தொகுதிகுட்பட்ட 174 வது வாக்குசாவடி மையத்தில் கூட்டமாக வாக்காளர்கள் நின்று கொண்டிருந்தை பார்த்த காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து நின்று கொண்டிருந்தனர். அப்போது போலீசார் கூட்டம் கலைந்து செல்ல லேசான தடியடியில் ஈடுபட்டபோது, அங்கு இருந்த இரண்டு பெண்வாக்காளர்கள் காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.