அரவக்குறிச்சி, மே 19: அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது தேர்தல் அதிகாரியிடம் அதிமுகவினர் புகார். இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தோட்டக் குறிச்சி வாக்குச்சாவடி மையம் அருகே 300 மீட்டர் தொலைவில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை வரவேற்க 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்திருந்தனர்.

அவர்களை கலைந்து போக சொல்லி போலீசார் அறிவுறுத்திய போது, திமுகவினருக்கும், போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பதாகவும் வாகனம் மூலம் ஆட்களை கொண்டு வந்து வாக்களிக்க வைக்க ஏற்பாடு செய்வதாகவும், திமுக வேட்பாளர் மீது அதிமுகவினர் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.