சென்னை, மே 19: நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நுங்கம்பாக்கம் பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கணேசன் (வயது 24), மற்றும் அரவிந்தன் (வயது 21) என்பதும் நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவர்கள் பாலத்தின் கீழே நின்று கொண்டு அந்த வழியாக செல்வோரிடம் செல்போன்களை பறிப்பது தெரிய வந்தது.

அவர்களை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.