சென்னை, மே 19: அயனாவரத்தில் மளிகை கடையின் ஷட்டரை உடைத்து ரூ. 40 ஆயிரம் திருடிச்சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அயனாவரம் துரைசாமி தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் கோபி (வயது 47). இவர் வழக்கம் போல் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இன்று காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்து ரூ. 40 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவு களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.