விழுப்புரம்,மே.19: திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று வைகாசி விசாகம் மற்றும் வசந்தோற்சவ நிறைவு விழா நடந்தது.

அதனையொட்டி, அதிகாலை 4 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு நித்திய பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு வைகாசி விசாகத்தை முன் னிட்டு தேகளீச பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.

மதியம் 1 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீச பெருமாள் சிறப்பு திரு மஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்தம், சாற்றுமுறை, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மாலை 6 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சமேத தேகளீசபெருமாள் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி வசந்தோற்சவ பெருவிழா நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.