கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகர்

சினிமா

கன்னடத்தில் வெளியான தேசி படம் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கிய மணி தொடர்ந்து பெங்காலி, ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துவருகிறார். மணி தமிழனாக இருந்தாலும் முதல் வாய்ப்பு கன்னடத்தில் கிடைத்துள்ளது.

அதன் பிறகு பல படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ள மணி, பிரபல வசனகர்த்தா ஏ.ஆர்.கே.ராஜராஜா இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார்.முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக அதை உருவாக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க உள்ளது.

இது குறித்து மணி கூறுகையில், நான் எத்தனை மத்திய, மாநில அரசு விருதுகளை பெற்றாலும், என் தமிழ் மொழியில் நடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் வாழ்வதே எனக்கு மிகப்பெரிய விருதாக கருதுவேன்.அது விரைவில் நடக்க இருக்கிறது என்றார்.