புனே, மே 20: மகாராஷ்டிரா மாநிலத்தின் கெத் பகுதியைச் சேர்ந்த கெய்குவாட் என்பவரின் குடும்பத்தினர், நேற்று உறவினர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் தலேகானுக்கு அருகில் உள்ள ஜாதவ் வாடி அணைக்கு சென்றுள்ளனர்.

அணையில் நீர்வரத்து வேகமாக வந்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென தடுக்கி விழுந்து நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற சிறுவன் உட்பட மேலும் இருவர் நீரில் மூழ்கினர்.
இந்நிலையில் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு குடும்பத்தினர் நீரில் மூழ்குவது குறித்து சிலர் தகவல் கொடுக்கவே, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதில் நீரில் மூழ்கியவர்களுள் மூன்று பேரை மீட்பு படையினர் காப்பாற்றி உள்ளனர். ஆனால், பிரஷில் யாதவ் (வயது 7), அனில் கோல்சே (வயது 58), பிரிதேஷ் அகாலி (வயது 32) ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.