தாம்பரம், மே 20: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடந்த சரபேஸ்வரர் ஏகாதின லட்சார்ச்சனை பெருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ சரபேஸ்வரர் ஏகாதின லட்சார்ச்சனை பெருவிழா நடைபெற்றது . இதனையொட்டி, சரபேஸ்வரர் சிலை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காலை 7 மணியளவில் சரபேஸ்வரர் ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ஹோமத்திற்காக பட்டு புடவை பல்வேறு விதமான மலர்கள், ஹோமோ திரியங்கள் ஆகியவை சீர்வரிசையாக எடுத்துவரப்பட்டு யாகத்திற்காக அளிக்கபட்டதுடன் சிறப்பு ஏகாதின லட்சார்ச்சனை நடைபெற்றது . இதில், 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து இறைவனை வழிப்பட்டனர்.