சிதம்பரம், மே 22: சிதம்பரம் அருகில் புதுச்சத்திரம் சின்னாண்டி குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் வயது 70 இவரது மனைவி மல்லிகா வயது 60 இவரது ஒரே மகன் பாலமுருகன் வயது 43 இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்

மேலும் பாலமுருகன் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தனது தந்தை ஜெயராமனிடம் சொத்தைப் பிரித்துக் கொடுக்குமாறு கேட்டு அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்தார் இந்த நிலையில் தகராறு முற்றி பாலமுருகன் பலகையால் தனது தந்தை ஜெயராமனை தலை மற்றும் உடலின் பல இடங்களில் தாக்கினர்.

இதனால் படுகாயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார் இதை தடுக்க முயன்ற ஜெயராமனின் மனைவி மல்லிகாவையும் பாலமுருகன் பலமாக தாக்கியதால் படுகாயத்துடன் மல்லிகா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சம்பவம் பற்றி தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொலை செய்யப்பட்டு இறந்து போன ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்