சென்னை, மே 22: அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் உடல் மற்றும் மன ரீதியாக தகுதி உடையவர்களாக ஆகலாம் என்றும், அனைத்து நிலைகளிலும் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும் என்றும் மாணவர்களை விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் அறிவுறுத்தினார்.

விஐடி சார்பில் 6-வது கோடைகால பயிற்சி முகம் மே 1-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி நிறைவடைந்தது. நிறைவு விழாவில் ஜி.வி,செல்வம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- குழந்தைகள் அதிகாலையில் எழும் பழக்கத்தை கைவிடக்கூடாது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், தினமும் இதை மேற்கொண்டால் உடல் மற்றும் மன ரீதியாக அனைத்து தகுதிகளையும் பெற முடியும், உடற்பயிற்சி செய்வதால் உடலில் ரத்த ஓட்டம் சீர்படுகிறது. மனமும், உடலும் நலம் பெறுகிறது.

இந்த கோடைப்பயிற்சி முடிவடைந்தாலும் காலையில் எழுவதை நிறுத்திவிடக்கூடாது. எல்லா நிலைகளிலும் விளையாட்டுகளில் பங்கு பெறுங்கள். மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாட்டுகளில் பங்கேற்பதால் உயர்கல்வியில் முக்கியத்துவமும், வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றார். முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை ஜி.வி.செல்வம் வழங்கினார்.

இந்த முகாமில் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இதில் சேர்ந்து இதில் பயனடைகிறார்கள், நிபுணர்கள் மூலம் அத்லெட்டிக்ஸ், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சியும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டது.