விழுப்புரம்,மே.23: சின்னசேலம் ரெயிலடி விநாயகர் கோவிலில் மழை வேண்டி நேற்று முன்தினம் 108 சங்கு அபிஷேகம் மற்றும் வேள்வி பூஜை நடந்தது.

அதனையொட்டி, மூலவர் வலம்புரி விநாயகர் தங்கக்கவச அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மழை வேண்டி 108 சங்கு அபிஷேகம், வேள்வி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.