சென்னை, மே 23:  மக்களவைத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க் கட்சிகளின் கனவுகள் தகர்க்கப்பட்டுள்ளன.

பிஜேபி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகி வரலாறு படைக்கிறார்.
இதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச்செய்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

மக்களவை பொதுத்தேர்தலில் அற்புதமான வெற்றி பெற்றதற்காக உங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இரண்டாவது முறையாக ஆட்சி செய்வதற்கான கவுரவத்தை நாட்டு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். உங்களது சிறப்பான தலைமையின் கீழ் இந்திய அரசு திறமையுடன் செயல்பட எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.